திருவாரூர் அருகே இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பங்கேற்பு

0
206

திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி பள்ளிவாசலில் திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் கலந்து கொண்டு நோன்பு திறந்துவைத்து உரையாற்றினார். அப்போது அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது,

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலம் தொடங்கி ஜெயலலிதா அவர்களது காலத்திலும் தற்போது கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் ஆகியோர் தலைமையில் வழிநடத்தப்படும் அதிமுகவும் அதன் ஆட்சியும் தொடர்ந்து சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாகவும் நண்பனாகவும் விளங்கி வருகிறது. ஜெயலலிதா அவர்களை பொறுத்தவரை ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட பொதுவான தலைவராக விளங்கினார். சிறுபான்மையினர் மீது குறிப்பாக இஸ்லாமிய மக்கள் மீது தனிப்பாசம் கொண்டவராக விளங்கினார். அதனால் தான் ரம்ஜான் நோன்பிற்காக தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5415 மெட்ரிக் டன் அரிசியினை வழங்கினார். இதனை வழங்கக்கூடிய வாய்ப்பினை உணவுத்துறை அமைச்சர் என்ற முறையில் எனக்கு வழங்கினார். இந்த அரிசி வழங்கும் திட்டத்தினை பாகிஸ்தான் நாட்டிலேயிருந்து வெளிவரக்கூடிய பத்திரிக்கைகள் பாராட்டின. இப்படி பலரும் பாராட்டும் செயல்களை செய்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா அவர்களது வழிவந்த நாங்கள் அதே நடைமுறையினை கடைபிடித்து வருகிறோம். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை கூறி இந்த இப்தார் நோன்பை தொடங்கி வைக்கிறேன்.  இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கோபால் எம்பி, ஜமாத் நிர்வாகிகள் ஜலாலுதீன், ஒளிமுகமது, கலிலுலியா, ஜாஹிர், சேக்அலாவுதீன், பஜ்லுல்ஹக், அதிமுக நிர்வாகிகள் பொன்வாசுகிராமன், தமிழ்;ச்செல்வம், அன்பு, இராம.குணசேகரன், சம்பத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here