ரஜினி ரூபத்தில், தி.மு.க., – காங்கிரஸ் உறவில், விரிசல்

0
288

தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட, ‘இப்தார்’ நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்க மறுத்ததால், இரு தரப்புக்கும் இடையே, உரசல் உருவாகியுள்ளது.

துாத்துக்குடி, ‘ஸ்டெர்லைட்’ ஆலை விவகாரம் தொடர்பாக, சட்டசபை புறக்கணிப்பு முடிவை, தி.மு.க., எடுத்தது. அதில், காங்கிரசுக்கு உடன்பாடில்லை. அதனால் தான், சென்னை, அறிவாலயத்தில் நடந்த, போட்டி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரசார், மறுநாளே, சட்டசபைக்கு சென்றனர்.

மேலும், வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டால், ரஜினியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும், ரஜினியை மையப்படுத்தி, தி.மு.க.,விடம் பேரம் பேசலாம் என்றும், டில்லி தலைமை கருதுகிறது.

இந்நிலையில், ரஜினியை, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர், கராத்தே தியாகராஜன், சமீபத்தில் சந்தித்து பேசினார். பின், பேட்டி அளித்த அவர், ‘சிதம்பரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதான, மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு, ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை’ என்றார்

.ரஜினிக்கு ஆதரவாக, கராத்தே தியாகராஜன், ‘டிவி’ விவாதங்களில் பேசி வருவதும், ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. இதனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை ஒட்டி, ரஜினி தெரிவித்த வாழ்த்து செய்தியை, ‘முரசொலி’ நாளிதழில் வெளியிடாமல், இருட்டடிப்பு செய்யப்பட்டது.

தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னையில் நடத்தப்பட்ட, ‘இப்தார்’ நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு வரும்படி, ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் வர மறுத்து விட்டார். தனக்கு பதிலாக, ராஜ்யசபா எம்.பி., – டி.கே.எஸ்.இளங்கோவனை அனுப்பி வைத்தார்.

ஸ்டாலின் புறக்கணித்த தகவல், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு தெரிய வந்ததும், அவர் அதிருப்தி அடைந்துள்ளார். இது குறித்து, தி.மு.க.,வினர் கூறுகையில், ‘ரஜினி ரூபத்தில், தி.மு.க., – காங்கிரஸ் உறவில், விரிசல் உருவாகியுள்ளது’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here