சுயகவுரவத்தை இழந்து பதவியில் ஒட்டி கொண்டிருக்க மாட்டேன்- குமாரசாமி

0
159

பெங்களூரு: கர்நாடகா அரசில், காங்கிரசுடன் இலாகாக்களை பகிர்ந்து கொள்வதில் பிரச்னை உள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இதனால், அரசு கவிழாது. இதனை கவுரவ பிரச்னையாக எடுத்து கொள்ளாமல், தீர்த்து வைக்க முயற்சி செய்வேன். சுயகவுரவத்தை இழந்து பதவியில் ஒட்டி கொண்டிருக்க மாட்டேன் என்றார். அமைச்சரவை பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் முடிவெடுக்கப்படவில்லை. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் எனக்கூறப்படுகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், இன்றைய பேச்சுவார்த்தையில் இழுபறி முடிவுக்கு வரும். குமாரசாமி, ராகுலுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். முதல்கட்டமாக 16 அமைச்சர்கள் பதவியேற்பார்கள். அதில், இலாக்காக்கள் ஒதுக்கீடு குறித்து முடிவு ஏற்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here