காங்., பொறுப்பாளர்கள் மாற்றம்

0
216

புதுடில்லி: ஆந்திராவின் காங்., பொறுப்பாளராக உம்மன்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள முதல்வராக இருந்த உம்மன்சாண்டி ஆட்சியை இழந்த பின்னர் சற்று அமைதியாகவே இருந்து வருகிறார்.

ராகுல் காங்., தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கட்சியில் பெரும் மாற்றம் எதுவும் கொண்டு வரவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநில காங்., கட்சியின் முழு பொறுப்பாளராகவும், பொதுசெயலாளராகவும் உம்மன்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த பொறுப்பில் திக்விஜயசிங் இருந்தார். அவருக்கு மாற்று பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

இது போல் மேற்கு வங்க காங்., பொறுப்பாளராக கவுரவ் கோகை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்தமான் நிகோபார் தீவு பகுதியையும் கவனிப்பார். மேற்கு வங்க பொறுப்பில் இருந்த ஜி.பி., ஜோஷி நீக்கப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here