மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு விளையாட, மரியா ஷரபோவா தகுதி

0
292

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, முன்னாள் நம்பர் 1 வீராங்கனை மரியா ஷரபோவா தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் ரோமானியாவின் இரினா கேமலியா பேகுவுடன் நேற்று மோதிய ஷரபோவா (ரஷ்யா), கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டில் 7-5 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டில் அதிரடியாக விளையாடிய அவர் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டி 1 மணி, 32 நிமிடம் நீடித்தது.

உலக தரவரிசையில் ஷரபோவா தற்போது 52வது இடத்திலும், கேமலியா பேகு 38வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு 2வது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6-3, 7-5 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் பெத்ரா மார்டிக்கை வீழ்த்தினார். கிறிஸ்டினா மிளாடெனோவிச் (பிரான்ஸ்) தனது 2வது சுற்றில் 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஷுவாய் ஸாங்கை (சீனா) வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here