வவ்வால் மூலம் ‘நிபா’ வைரஸ் பரவவில்லை’

0
302

புதுடில்லி : கேரளாவில், வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், அதில், ‘நிபா’ வைரஸ் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில், நிபா வைரஸ் தாக்கி, 12 பேர் உயிரிழந்தனர். முதலில் உயிரிழந்த இரண்டு பேரின் வீட்டு கிணற்றில் இருந்த வவ்வால்கள் மூலம், இந்த வைரஸ் பரவியதாக கூறப்பட்டது.இதையடுத்து, அந்த வீட்டில் இருந்த வவ்வால் உட்பட, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வவ்வால், பன்றி, எருது மற்றும் ஆடுகளிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ம.பி.,யின் போபால் மற்றும் மஹாராஷ்டிராவின் புனே ஆகிய இடங்களில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதை பரிசோதனை செய்து பார்த்ததில், அந்த மாதிரிகள் எதிலும், ‘நிபா’ வைரஸ் இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து, வேறு எந்த வகையில், நிபா வைரஸ் பரவி இருக்கும் என்பது பற்றி மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here