தேங்காய்ப் பால் ஒரு அதிசயமான மருந்து

0
293

பாரம்பரியமாக, நம் மண்ணில் விளைந்து, நம் உணவிலும், வழிபாட்டிலும், மருந்துகளிலும் நீக்கமற, தேங்காய் நிறைந்துள்ளது. ‘தேங்காயை உணவில் சேர்த்தால், கொழுப்பு அதிகரித்து விடும்; உடலுக்கு கேடு விளைவிக்கும்’ என, திட்டமிட்டு, பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.தற்போது, அந்த மூடநம்பிக்கை மாறி வருகிறது. தேங்காயை நேரடியாக பயன்படுத்துவதை விட, அரைத்து, பால் எடுத்து பயன்படுத்துவதால், நிறைய நோய்களை குணப்படுத்த முடியும். தேங்காய்ப் பாலை, ஒரு அதிசயமான மருந்து என்றே சொல்லலாம். இதன் முதல் பயன், உடல் சூட்டை குறைப்பது; ஒல்லியானவர்களை சற்று பூசினாற் போல் பளபளப்பாக மாற்றுவது, இதன் தனித்தன்மை. வாய்ப்புண், வயிற்றுப் புண்களை குணப்படுத்துவதோடு, மூளை வளர்ச்சிக்கும் இது பயன்படுகிறது.பாஸ்பரஸ், மாங்கனீஸ், வைட்டமின், ‘சி, இ, பி1, பி3, பி5, பி6’ மற்றும் இரும்புச்சத்து, செலினியம், கால்ஷியம், தாமிரம் போன்ற பல சத்துகள் நிறைந்திருப்பதால், இதை ஒரு அற்புத பானம் என்றே சொல்லலாம். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். வயிற்றினுள், பெருங்குடலின் வறட்சித்தன்மையை போக்கி, மலச்சிக்கலை நீக்கும்; மூலநோய் வராமல் பாதுகாக்கும். ரத்தசோகை போன்ற நோய்களையும் தடுத்து விடும். இதில் உள்ள மக்னீஷியம், தசை வலி மற்றும் நரம்பு வலிகளுக்கு நிவாரணியாக உள்ளது.பசியை அடக்கும் ஆற்றல் கொண்டதால், தேங்காய்ப்பாலை பருகி, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். செலினியம் அதிகம் இருப்பதால், கீல்வாதம், முடக்குவாதம் போன்றவற்றை தடுக்கிறது; பொட்டாஷியம் இருப்பதால், ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும்; வைட்டமின், ‘சி’ அதிகமிருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி, இருமல் போன்ற தொல்லைகளை நீக்கும்.தேங்காய்ப்பாலில் உள்ள நன்மை தரும் பாஸ்பரஸ், எலும்புகளை உறுதியாக்கும். மென்மையான எலும்புகளை கொண்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தேங்காய்ப்பாலை தடவி, சூரிய ஒளியில் நிற்க வைத்து, சூரியக் குளியல் செய்யலாம். இது, எலும்புகளை கடினமாக்கி, வலிமையை தரும். தேங்காய்ப்பாலுக்கு எலும்புப்புரை, எலும்பு வளைதல் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களை சரி செய்யும் ஆற்றலும் உண்டு.தேங்காய்ப்பால் ஆரம்பத்தில் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். உடலில் அதிக அமிலத்தன்மை இருப்பதால், தேங்காய் ஏற்றுக் கொள்ளாமல் போகும். அமிலத்தன்மை, உடலுக்கு தீங்கு செய்யக்கூடியது. எனவே, அமிலத்தன்மையை நீக்க, தொடர்ந்து தேங்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, சர்வரோக நிவாரணியான தேங்காய்ப் பாலால், பல நன்மைகளை அடையலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here