பீஹாரில் பா.ஜ., நிதிஷ் இடையே உரசல்

0
145

பாட்னா, பீஹாரில் லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீட்டில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பீஹாரில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதிஷ்குமார் உள்ளார். பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மேலிட குழு கூட்டம் நடந்தது. இதில் வரப்போகும் லோக்சபா தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.இதற்கு பா.ஜ.வைச் சேரந்த மூத்த தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பீஹார் மாநில பா.ஜ.துணை தலைவர் மிதிலேஷ்திவாரி கூறியது, பீஹாருக்கு நிதிஷ் குமார் கூட்டணி தலைவராக இருந்தாலும், பிரதமர் மோடி தலைமையில்தான் லோக்சபா தேர்தலை சந்திக்க போகிறோம்” எனவே பா.ஜ.வுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேணடும் என்றார்.
இரு கட்சிகள் இடையேயும் கருத்து வேறுபாடு எழுந்துள்ள நிலையில் , கூட்டணிக்குள் உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ., பின்னடைவை சந்தித்தன. இதனால் கூட்டணி ஜாகையை மாற்றலாமா அல்லது தொடரலாமா என முதல்வர் நிதீஷ்குமார் ஆலோசிக்க துவங்கியுள்ளார். இது/ குறித்து இரண்டாம் கட்ட பா.ஜ. தலைவர்கள் கூறுகையில், எங்கள் கூட்டணிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here