பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நான்காவது சுற்றுக்கு, மரிய ஷரபோவா முன்னேற்றம்

0
159

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றுக்கு, ரஷ்யாவின் மரிய ஷரபோவா முன்னேறினார். அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்காக அவர் காத்திருக்கிறார். கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த மகளிர் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் மரிய ஷரபோவா 6-2, 6-1 என்ற செட்களில் செகஸ்லோவாகியாவின் கரோலினா பில்ஸ்கோவாவை வென்றார்.

5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஷரபோவா, போதைப் பொருள் எடுத்துக் கொண்டதால் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கி மீண்டும் களமிறங்கியுள்ள அவர், நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜூலியா கோயர்ஜெஸ் இடையேயான மற்றொரு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறுவோருடன் அடுத்தச் சுற்றில் மரியா விளையாட உள்ளார். அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 4-6, 6-1, 8-6 என்ற செட்களில் கமிலா ஜியோர்ஜியை வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, எஸ்தோனியாவின் ஆனெட் கொன்டவிட் ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆடவர் 3வது சுற்று ஆட்டத்தில் இத்தாலியின் பேபியா பாக்னஇனி 6-3, 4-6, 3-6, 6-4, 6-4 என்ற செட்களில் பிரிட்டனின் கைல் எட்முன்டை வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். ரஷ்யாவின் கரேன் காச்சனோவும் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here