பாஜகவின் தொடர் வெற்றியை தடுக்க கூட்டணியில் சமரசம் செய்து கொள்ள சிபிஎம் முடிவு

0
115

கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள், எல்லோரைக் காட்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களை ரொம்பவே கலங்கடித்திருக்கிறது.

காங்கிரசும் ஒரு ஊழல் இயக்கம்தான். அதனால் அக்கட்சியோடும் கூட்டணி கிடையாது என கூறி வந்த மா. கம்யூனிஸ்ட் தலைமை, இதே நிலை தொடர்ந்தால், பிரதமர் மோடியின் அசுரத்தனத்துக்கு முட்டுக்கட்டைப் போட முடியாது. அடுத்தாண்டு நடக்கும் பார்லிமென்ட் தேர்தலிலும் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் ஆகி விடுவார். அதை தடுக்க முடியாது. அதனால், காங்கிரசோடு இருக்கும் பிணக்கை விலக்கி, இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே, மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் ஆட்சிப் பொறுப்பை இழந்து நிற்கும் கம்யூ.,, கேரளாவில் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. எதிர்கட்சிகள் பிளவுபட்டு நின்றால், அதை பயன்படுத்தி, பா.ஜ., வெற்றி பெற்று விடும். அதைத் தடுக்க, காங்., உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சியினரோடும் கூட்டணியாக இருந்து செயல்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here