பள்ளிகளை மூடும் திட்டத்தினை கைவிட வேண்டும். திருவாரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

0
321

திருவாரூர் ஜூன் 9: பங்களிப்பு ஓய்வூதிய முறையினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையினை தொடர வேண்டும். 7வது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை முற்றிலுமாக களைந்திட வேண்டும். 7வது ஊதியக்குழுவுக்கான 21 மாத நிலுவை தொகையினை உடன் வழங்கிடவேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் பணியிடங்கள் குறைப்பு என்ற பெயரால் ஆள்குறைப்பு என்ற அடிப்படையில் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதை நிறுத்திட வேண்டும்.

தொடக்கக்கல்வித் துறையினை களைத்து பள்ளிக் கல்வியுடன் இணைத்து நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரால் குளறுபடி செய்து தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலன்கள் பாதிக்கும் வகையில் 1600 தொடக்கப்பள்ளிகளை மூடும் திட்டத்தினை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ சார்பில் இன்று 9.6.18 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஆர்.ஈவேரா, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் ஆர்.முத்துவேல், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ப.பாரதி, ஆகியோர் கூட்டுத்தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலத் தலைவர் சா.மருதவாணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் எஸ்.துரைராஜ், தமிழ்நாடு பதவி உயர்வுபெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாநில சட்ட ஆலோசகர் ஆண்ட்ரூஸ்,  தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் பஞ்சாபகேசன் ஆகியோர் போராட்ட எழுச்சியுரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் இரா.முருகேசன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டப் பொருளாளர் ஆ.சுபா~;, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் முரளி, பிற ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மா.தங்கராசு, சு.நலங்கிள்ளி, பூ.சிவராஜ், டி.அன்பரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here