திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்துகள்

0
170

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாளில் அவரை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறோம். பொருளாதாரம், அரசியல், சமூக பின்னணி என எதுவும் இல்லாமல் தமிழகத்தின் அரசியல் களத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சியவர் கருணாநிதி. காமராஜர், இந்திராகாந்தி என அகில இந்திய தலைவர்களோடு இணைந்து பணியாற்றியவர். தந்தைபெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் வகுத்து தந்த பாதையில் பயணம் மேற்கொண்டவர். தமிழகத்தில் பல்வேறு புரட்சித் திட்டங்களுக்கு வழிவகுத்தவர். இவருடைய சமகாலத்து தலைவர்கள் யாரும் இல்லை எனக் கூறும் அளவுக்கு நெடிய அரசியல் களம் கண்டவர். கலைஞர் மு.கருணாநிதிக்கு இணை அவரே எனும் வகையில் வாழ்ந்து வருபவர். இவரது 95வது பிறந்தநாளில் வணங்குகிறோம். வாழ்த்துகிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here