திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மன்னார்குடியில் செ;யதியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக அரசு காவிரி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் சரியாக செயல்படவில்லை. 110 விதியின் கீழ் தண்ணீர் திறக்க முடியாது என்று சொன்ன ஒரே முதல்வர் ஈபிஎஸ். மத்திய அரசின் பிரான்ச் ஆபிஸாக தமிழக அரசு உள்ளது. மத்திய அரசு தமிழகத்திடம் பாராமுகமாக செயல்படுகிறது. ஜெயலலிதா யாரிடமும் அழுது கோரிக்கை வைக்கமாட்டார்.
எங்களிடம் உள்ள 18 எம்எல்ஏ க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள். அவர்கள் எப்போதுமே எங்களுடனே இருப்பர் எஸ்.வி.சேகர் மீது உச்சநீதிமன்றமே கைது செய்ய வலியுறுத்திய பின்னரும் அவரை கைது செய்யாமல் இருப்பது பிஜேபியை பார்த்து தமிழக அரசு பயப்படுகிறது.
திமுக சட்டசபையை விட்டு வெளியேறியது சரியே திமுகவுடன் கூட்டணி வைத்தால் எங்கள் தொண்டர்களே ஏற்க மாட்டார்கள். அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் சம்மந்தமில்லை. மாதிரி சட்டசபை சரியானதல்ல என்பதாலேயே திமுகவினர் மீண்டும் சட்டசபை வந்துள்ளனர்.
அடுத்த பிரதமர் யார் என்பதை தமிழக மக்களே நிர்ணயிப்பர். அரசியல் ரீதியாக தொண்டர்களால் உறுவாக்கப்பட்டது. என்னுடைய முன்னால் மாமா( திவாகரன்) கட்சி தொடங்குவதால் எந்த பிரச்சனையும் இல்லை. அரசியல் என்பது வேறு உறவு என்பது வேறு.
அற்பர்களுக்கு வாழ்வு வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் யார் மீது வேண்டுமானால் வழக்கு போடலாம் என்ற பாணியில் புதிய தலைமுறை நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் ஏற்றது தவறு. உயர்நீதிமன்றத்தில் அனுக உள்ளோம்
முன்னால் மாமா கட்சி தொடக்குவதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில் அம்மாவின் தொண்டர்கள் 90மூ எங்களிடம் உள்ளனர்எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது எப்போது மன்னார்குடியில் தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுபினர் ஆகுவார் 200சீட்டில் அமமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெரும். இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.