திமுகவினருடன் குஷ்பு இணக்கம். டி.கே.எஸ் எம்பி பதில்

0
282

சென்னை: குஷ்பு மீது திமுக கட்சியினர் முட்டை வீசியதாக திருநாவுக்கரசர் கூறினார் என்ற வந்த செய்தி முழுக்க முழுக்க பொய் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் டிகே எஸ் இளங்கோவன் எம்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சி குறித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியில் தற்போது தேசிய செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்பு குறித்தும், அவர் முன்பு திமுகவில் இருந்தது குறித்தும் பேசியுள்ளார்.

அதில் அவர் குஷ்புவை கண்டித்து அதிகம் பேசி இருந்தார். குஷ்பு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பேசுவதால், அவருக்கு எதிராக திருநா கோபமாக நிறைய கருத்துக்களை வீசி இருந்தார். இது காங்கிரஸ் கட்சி இடையில் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இன்று வந்த நாளிதழ் ஒன்றில், ”குஷ்பு திமுகவில் மரியாதையாக நடத்தப்படவில்லை, அவர் திமுகவில் இருந்த போது சில பிரச்சனைகள் வந்தது, இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், அவர் மீது முட்டை வீசி, செருப்பால் அடித்து கட்சியில் இருந்து நீக்கினார்கள் என்று திருநாவுக்கரசர் பேசியதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. இது காங்கிரஸ், திமுக, குஷ்பு உள்ளிட்ட எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்த நிலையில் அந்த நாளிதழ் வெளியிட்ட செய்தி பொய் என்று டிகே எஸ் இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ”திமுகவில் இருந்த காலத்தில் குஷ்பு மிகவும் மரியாதையாக நடத்தப்பட்டார், திமுகவில் யாருமே, குஷ்புவிடம் தரக்குறைவாக நடந்து கொண்டது இல்லை. அந்த செய்தியில் சிறிதும் உண்மையில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மறுப்பு தெரிவித்துள்ளார். திமுக கட்சியில் இருந்து வெளியேறிய பின்பும் கட்சி உறுப்பினர்களுடன் குஷ்பு இணக்கமான போக்கை கடைபிடித்து வருகிறார் என்பது குறிப்பித்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here