சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக முடிவு

0
275

சென்னை: சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க முடிவு செய்து திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அக்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கூட்டணி கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அது குறித்து திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டதை படித்து பார்த்தபின்னரே தம்முடைய கருத்தினை தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டசபை கூட்டத்தில் திங்கள்கிழமை முதல் பங்கேற்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவது; ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here