கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரல்- நீதிமன்றம் போக காங்- ஜேடிஎஸ் திட்டம்

0
203

பெங்களூர்: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநர் வஜூபாயை சந்தித்து பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா உரிமை கோரினார். இதையடுத்து பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 7 நாள் அவகாசம் கொடுத்துள்ளார் ஆளுநர். ஆட்சி அமைப்பதில் எடியூரப்பா மற்றும் குமாரசாமி தரப்பு கடும் போட்டா போட்டியில் உள்ளது. ஆளுநர் மாளிகையில் மஜத தலைவர்கள் குவிந்தனர். ஆனால் ஜேடிஎஸ் நிர்வாகிகள், குபேந்திர ரெட்டி, ரமேஷ் பாபு, சரவணன் ஆளுநர் மாளிகை சென்றபோதிலும் அவர்களை அனுமதிக்க ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்து விட்டது.

இதனிடையே ஆளுநரை சந்தித்தார் எடியூரப்பா. அவர் திடீரென மத்திய அமைச்சர் அனந்த்குமார், பாஜக எம்.பி. பிசி.மோகனுடன் ஆளுநர் மாளிகை விரைந்து சென்று, ஆட்சியமைக்க உரிமை கோரினார். முன்கூட்டியே அவர் தரப்பில் இதுபற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து எடியூரப்பா பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசம் கொடுத்தார் ஆளுநர். பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் பரமேஸ்வர், சித்தராமையா, ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி ஆகியோர் கூட்டாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். தங்களை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் நீதிமன்றத்துக்கு போக காங்- ஜேடிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here