அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்- போர்க்களமான சென்னை!

0
213

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக நேற்று முதலே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

இருப்பினும் திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எனவே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னைக்குள் நுழைவதை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜாக்டோ- ஜியோ போராட்டம் அறிவிப்பு காரணமாக தலைமை செயலகத்தை சுற்றி 2000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை நகரில் 6000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரை சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளிலும் வாகன சோதனை நடக்கிறது. இன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து பேரணியாக தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த மேலும் சிலரை போலீசார் தடுத்து கைது செய்தனர். இருப்பினும் நூற்றுக்கணக்கானோர் தனித்தனி குழுக்களாக தலைமைச் செயலகம் நோக்கி வந்தனர். சேப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது வலுக்கட்டாயமாக அவர்களை போலீசார் இழுத்து சென்றனர். பெண் ஊழியர்கள் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் கலைவாணர் அரங்கம் அருகிலும் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேப்பாக்கத்தில் மறியல் நடத்திய ஊழியர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். அப்போது பெண் ஊழியர்கள் மயங்கி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. கைது செய்ய செய்ய ஊழியர்கள் வந்துகொண்டே இருப்பதால் போலீசார் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here