அதிமுகவில் இணைய மாட்டேன். மன்னார்குடியில் திவாகரன் பேட்டி.

0
208

திருவாரூர் ஜூன் 10:  மன்னார்குடியில் திவாகரன் தனது கட்சி கொடியை வெளியிட்டு பேட்டியில் கூறியதாவது, கொடியில் உள்ள காறுப்பு சமூதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை குறிக்கிறது. சிகப்பு அனைத்து மனிதர் களுக்கும் ரத்தம் சிகப்பு என்பதால் சமத்துவத்தை குறிக்கும். வெள்ளை மனிதனின் அறிவு மற்றும் சமாதனம். கொடியிலுள்ள 5 நட்சத்திரம் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, மற்றொரு நட்சத்திரம் பெயர் சொல்லப்படாத முனையம். அம்மா அணி இன்றையிலிருந்து அண்ணா திராவிடர் கழகம் என அழைக்கப்படும் திவாகரன் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார் அண்ணா திராவிடர் கழகம் திருநங்கைகளுக்கு பிரிவு ஏற்படுத்தப்படும். திராவிடம் என்பது தென் தமிழகத்தின் இனம். ஆதிதிராவிடத்தில் இருந்து வந்தது திராவிடம் .

கட்சி பெயர் குறித்து தெரிவித்த போது … திராவிடம் பெரியாரையும், அண்ணா பேரறிஞர் அண்ணாவையும் குறிக்கும் தினகரன் கட்சி வேறு உறவு வேறு என கூறியிருப்பது.  உறவு இல்லை என்றால் இவர் பதவிக்கு வந்திருக்க முடியாது என திவாகரன் தெரிவித்தார். காவிரி பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என கமல் கூறுவது நடிகர் வடிவேலு நகைசுவை போன்று மீண்டும் மறுபடியுமா என்பது போல் உள்ளது கமலுக்கு காவிரி என்றால் என்னவென்று தெரியாது.

200 ஆண்டுகால காவிரி போராட்டத்தை மீண்டும் பின்னுக்கு தள்ளுகிறார் கமல். தங்களது படத்தை வியாபாரம் செய்யவே ரஜனி கமல் அரசியல் நடத்தி வருகின்றனர். எங்கள் கட்சி பிறந்து 20 நாட்களே ஆகிறது உங்கள் ஆசியிருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். தண்ணீயின்றி குறுவை சாகுபடி மட்டுமின்றி சுமார் ஒரு கோடி தென்னை மரங்கள் பட்டு போய் உள்ளது. எனவே அரசு ஆறுகளை சீர்மைத்து தூர் வாரவேண்டும்

குறிபிட்ட மோயாறு தண்ணீரை காவிரியில் சொண்டு வந்தால் 200டிஎம்சி நீர் கிடைக்கும் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். வருகிற 2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும் என் எதிர்ப்பார்கின்றேன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகத்துவமனை ஆடியோ வெளியிட்டது உண்மைதான். அது ஜெயலலிதாவின் குரல்தான் நீட் தேர்வில் தமிழக அரசு வெளிப்படையாக எதிர்க்கவில்லை. வெளிப்படையாக எதிர்த்தால் தான் தீர்வு கிடைக்கும்.

அதிமுக இணைய மாட்டேன் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கவே கட்சி தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் யாருடனும் இணைய வேண்டியதில்லை புரட்சி தலைவர் காலத்தில் இருந்து அரசியலில் உள்ளேன். பட்டும் படாமல் இருந்த நான், ஜெயலிலதா பிரிந்த போது ஜெ அணியை 90 சதவிதம் நிர்மாணத்தது நான் தான் தமிழக சட்ட ஒழுங்கு துப்பாக்கி குடு நடத்தும் அளவில் உள்ளது. தமிழகத்தில் பெண் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு உளவுத்துறையை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தை பெறுத்தவரை அரசியல்வாதிகள் பேசுவதேயில்லை என கூறலாம்.  அண்ணா மட்டும் தான் நாடாளுமன்றத்தில் வட இந்தியர்களை கலங்கடித்தவர். அண்ணா காலம் முதல் இந்திய ஜனநாயகம் முழு சுந்திரம் இல்லை. கருத்து சுதந்திரம் இல்லை, குறள்வளை நெறிக்கபடுகிறது,

பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வேதனையளிக்கிறது. ஜாதி பேரை சொல்லி தேர்தலில் நின்றால் அனைத்து ஜாதியினரும் ஒன்றிணைந்து தோற்கடித்துவிடுவார்கள். எடுத்து காட்டாக பென்னாகரத்தில் அன்புமணி தோற்றார். இவ்வாறு திவாகரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here