தேசிய அரசியலில் தாக்கங்களை, ஏற்படுத்திய கர்நாடக தேர்தல் முடிவுகள். மாநில கட்சிகளின் கை ஓங்குகிறது.

0
285

தேசிய அரசியலில் பல்வேறு தாக்கங்களை, ஏற்படுத்திய கர்நாடக தேர்தல் முடிவுகள். மாநில கட்சிகளின் கை ஓங்குகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் அமையவுள்ள கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், அதிக தொகுதிகள் கேட்டால், தங்கள் தலைமையில் அமையவுள்ள கூட்டணியிலிருந்து, காங்கிரசை கழற்றி விட, தி.மு.க., தயங்காது’ என, அரசியல் வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. தேசிய அரசியலில் பல்வேறு தாக்கங்களை, கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. மதச் சார்பற்ற ஜனதா தளம் பெற்ற வெற்றி தான், இதற்கு காரணம்.

பா.ஜ., காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள், தங்கள் வெற்றி இலக்கை பெரும்பாலான வேளைகளில் கோட்டை விடுவது, மாநில கட்சிகளால் தான். இரு கட்சிகளின் வெற்றிப் பாதையில் பெரும் முட்டுக்கட்டையாக ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில கட்சிகள் நிற்கின்றன. மதச் சார்பற்ற ஜனதா தள வெற்றி, கர்நாடக உள்ளது.கர்நாடக தோல்விக்கு பின், கட்சிஅரசியலையே புரட்டிப் போட்டுள்ளது.

இக்கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டுமென, மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் வலியுறுத்தியும், காங்கிரஸ் அதை கேட்கவில்லை.

மோடி,- அமித் ஷா தலைமையில் வலுவாக உள்ள, பா.ஜ.,வை, ஒற்றை ஆளாக எதிர்த்து நிற்க கூடிய அளவுக்கு, போதிய பலம் இல்லை என்ற நடை முறை கூட புரியாமல், இன்னமும் பழைய நினைப் பிலேயே, காங்கிரஸ் இருப்பதாக விமர்சனம் தலைமை மீது, மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.

குலாம்நபி ஆசாத், அகமது படேல் போன்ற அனுபவம் மிக்கவர்களை விட்டு, கேரள, எம்.பி., வேணுகோபால் போன்றவர்களை, ராகுல், முன் நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடகாவில், காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியால், மாநில கட்சிகளின் கை ஓங்கப் போகிறது. தமிழகத்தில், தி.மு.க.,வுடன் கூட்டணியில் நிச்சயம் சிக்கல் வரும்.

கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு பெரும் பான்மை கிடைக்காமல் போனதற்கு, காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியதே காரணம் என்ற, குற்றச்சாட்டு உள்ளது.அதற்கு முன், மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்தும், 2011 சட்டசபை தேர்தலில், 63 தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு, உருட்டல், மிரட்டல்களை எல்லாம் காங்கிரஸ் செய்யவேண்டியிருந்ததை பலரும் அறிவர்.

‘எக்ட்ரா லக்கேஜ் எதற்கு’ என்ற முணுமுணுப்பு, தி.மு.க.,வின் பல மட்டங்களில் கேட்கிறது. இதனால் தான், மாற்று ஏற்பாடாக,வேறு சில கட்சிகளுடன், தமிழக காங்கிரஸ் தலைமை, பேச்சு நடத்தி வருவதாக கூறப் படுகிறது. இந்நிலையில் தான், கர்நாடகாவில் காங்கிரசுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. தானாக கையில் வந்து விழுந்துள்ள இந்த வாய்ப்பை, தி.மு.க., நிச்சயம் நழுவ விடாது. அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், தி.மு.க., வின் வேலை தெரிய வரும்.

தடைகளை தாண்டி, கூட்டணிக்கு, தி.மு.க., சம்மதிக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்.  தொகுதி பங்கீடு குறித்த பேச்சில், எடுத்த எடுப்பிலேயே, ஒற்றை இலக்கத்தில், தி.மு.க., ஆரம்பிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்த விஷயத்தில், காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தால், கூட்டணியிலிருந்து, அந்த கட்சியை கழற்றி விடவும், தி.மு.க., தயங்காது என, அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமில்லை; மஹாராஷ்டிரா வில் தேசியவாத காங்., மேற்கு வங்கத்தில் திரிணமுல் அல்லது இடதுசாரிகள், உ.பி.,யில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என, பல கட்சிகள், வரிசை கட்டி, காங்கிரசுக்கு நெருக்கடி தரப்போவது நிச்சயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here