அமெரிக்க வடகொரியா அதிபர்கள் சிங்கப்பூரில் சந்திக்க திட்டம்

0
122

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜேவை கடந்த ஏப்.27-ல் சந்தித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த சந்திப்பின் போது இரு நாடுகளும் அணுஆயுதமற்ற நாடாக கொரியாவை மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக தென்கொரியா தூதரக குழுவிடம் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பை சந்திக்க விரும்புவதாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்தார்.இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை முடிவு செய்யப்படாமல் இருந்தது. கடந்த 4-ம் தேதி டெனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை சந்தித்துப் பேசப்போகும் தேதியும், இடமும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் அதுவரை காத்திருங்கள் என்றார்.
இந்நிலையில் தென்கொரியாவில் இருந்து வெளிவரும் நாளிதழ்களில் கூறப்பட்டுள்ளது, அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஜூன் 8-ம் தேதி கனடாவில் நடக்க உள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் ஜூன் 9-ம் தேதி சிங்கப்பூரில் நடக்க உள்ள மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here